சிம்புவின் அமைதிக்குப் பின்னால்...?

சிம்புவின் அமைதிக்குப் பின்னால்...?

செய்திகள் 1-Apr-2014 2:25 PM IST Chandru கருத்துக்கள்

சிம்பு நடித்த படம் வருகிறதோ இல்லையோ, ஆனால் அவரைப் பற்றிய செய்திகள் எப்போதும் மீடியாக்களில் வலம் வந்து கொண்டேயிருக்கும். அவற்றில் பெரும்பாலானவை சர்ச்சைக்குரிய விஷயங்களாகவும் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி தற்போது சினிமாவின் மீது முழுக்கவனத்தையும் திசை திருப்பியிருக்கிறார் சிம்பு. சமீப நாட்களாக சிம்பு குறித்து எந்தவித செய்திகளும் மீடியாக்களில் வெளிவரவேயில்லை. விசாரித்ததில் நமக்குக் கிடைத்த தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன. சத்தமில்லாமல் தான் ‘கமிட்’டாகியிருக்கும் ஒவ்வொரு படமாக முடித்துக் கொண்டு வருகிறாராம் சிம்பு.

சின்ன வயதிலேயே படத்திற்குப் படம் வித்தியாசமான ரோல்களிலும், கெட்அப்களிலும் நடித்து பேர் வாங்கிய சிம்பு, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காக புதுவிதமான கெட்அப் ஒன்றில் தோன்றவிருக்கிறாராம். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்துக் கொண்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஷெட்யூலை முடித்துவிட்டு, 15 நாட்கள் ஓய்வெடுக்கிறாராம் சிம்பு. இந்த 15 நாட்களை செல்வராகவன் படத்தில் தோன்றவிருக்கும் கெட்அப்பிற்காக செலவிடுகிறாராம். இதனையடுத்து இரண்டு படங்களுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.

இது ஒருபுறமிருக்கு, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்திற்கும் மேல் முடிவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். இன்னும் ஒருசில காட்சிகளும், ஒரு பாடல் காட்சி மட்டுமே ஷூட் செய்ய வேண்டியிருக்கிறதாம். ‘போடா போடி’ படத்திற்குப் பிறகு சிம்பு ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது கையில் வைத்திருக்கும் படங்களையெல்லாம் முடித்துவிட்டு, அடுத்தடுத்து இந்த வருடத்திலேயே அனைத்துப் படங்களையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் சிம்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;