த்ரிஷா இல்லேனா நயன்தாரா - வேறு யார்?

Who is GVP Heroine

செய்திகள் 1-Apr-2014 12:09 PM IST VRC கருத்துக்கள்

‘கும்கி’யை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கி வரும் படம் ’கயல்’. இந்தப் படத்தில் புதுமுகங்கள் சந்திரன், ஆனந்தி ஜோடியாக நடிக்கிறார்கள். ’கயல்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பாகவே படத்தின் நாயகி ஆனந்திக்கு மற்றுமொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது! தற்போது, ‘பென்சில்’ படத்தில் ஹீரோவாக நடித்து வரும் இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் அடுத்து நடிக்கவிருக்கும் படம் ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’. இப்படத்தில் ஜி.வி.யுடன் ஜோடி சேரவிருப்பவர் ‘கயல்’ ஆனந்தி தான்! தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் ‘மெல்லிசை’ படத்தை தயாரித்து வரும் ‘ரெபெல் ஸ்டுடியோ’ நிறுவனம் தான் ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஆதிக் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;