இணையும் ஐ, அஞ்சான், கத்தி!

இணையும் ஐ, அஞ்சான், கத்தி!

செய்திகள் 1-Apr-2014 10:32 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடத்தின் ‘மோஸ்ட் வான்டட்’ லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கும் ‘ஐ’, ‘அஞ்சான்’, ‘கத்தி’ படங்களின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ எப்போது வரும் என்பதுதான் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விக்ரமின் வித்தியாசமான கெட்அப்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசை என இப்படம் எப்போது வரும் என்ற ஆவல், தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களுக்கும் உள்ளது. படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கும் ஷங்கர், ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸரை தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் என அந்த டீமிலிருந்து செய்திகள் வந்துள்ளன.

இதே நாளில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கும் வெளிவர இருக்கிறதாம். அதேபோல் லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் என்றும் சொல்கிறார்கள். ஆக, இந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் காத்திருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;