பத்மபூஷண் விருது! - கமல் நெகிழ்ச்சி

பத்மபூஷண் விருது! - கமல் நெகிழ்ச்சி

செய்திகள் 1-Apr-2014 10:30 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, ஜனதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இதில், நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை நடிகர் கமல்ஹாசனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். பத்மபூஷண் விருதுபெற்ற சந்தோஷத்தைப் பகிரும் வகையில் கமல் வெளியிட்ட அறிக்கையின் விவரம்...

‘‘ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத்தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல, என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டும் ஒரு முறை குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்தபோது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதை உணர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எந்த துறையில் வென்றாலும் பூரிப்படைவேன்.’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;