பிரேம்ஜி நடிக்கும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’

பிரேம்ஜி நடிக்கும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’

செய்திகள் 1-Apr-2014 10:20 AM IST Inian கருத்துக்கள்

தமிழில் ‘தனி இசை’ ஆல்பங்கள் வரவில்லை என்ற ஏக்கத்துடன் இருக்கும் இசைப் பிரியர்களுக்காக ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற இசை ஆல்பம் உருவாகி உள்ளது. தமிழில் வெளிவர இருக்கும் முதல் பன்முக இசை ஆல்பமான இதற்கு தயா சைரஸ் இசையமைத்துள்ளார். எஸ்.மகேஷ் தயாரித்து, இயக்கி உள்ளார்.

இந்த ஆல்பத்தில் ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜி, போபோ சசி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் பாடல்களில் நடித்திருக்கிறார்கள். ‘நமச்சிவாயா…’ எனத் தொடங்கும் பாடலில் மாணிக்கவாசகரின் வரிகளுடன் வேத மந்திரமும் ராக் இசை வடிவில் கலந்து ஒரு ஃபியூஷன் பாடலாக உருவாகியிருக்கிறது.

‘புன்னகை ஒன்றுதான்…’ என்ற பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா நடித்து, நடனமும் ஆடியிருக்கிறார். இப்பாடல் வெளிநாடுகளிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. ‘நான் ஒரு காதல் ரோமியோ…’ என்ற துள்ளல் இசைப் பாடலில் பிரேம்ஜி, நடித்து நடனமாடியிருக்கிறார். அவருடன் ‘கலாபக் காதலன்’ படத்தின் நாயகியான அக்ஷராவும் நடித்துள்ளார். ஒரு மும்பை மாடலும் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு பின்னி மில் மற்றும் சென்னையில் உள்ள ஒரு பிரபல கிளப்பில் நடைபெற்றது. வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார். இந்த பாடலில் கிராஃபிக்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

அடுத்து போபோ சசி பாடி நடிக்கும் பாடல் படமாக்கப்பட உள்ளது. இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க உள்ளார். இந்த ஆல்பம் பற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்.மகேஷ் கூறியதாவது,

'‘ஸ்மைல் ப்ளீஸ்’ ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு, ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகையா இருக்கும். கருத்துக்களை எல்லாம் சொல்லாம மகிழ்ச்சியோட இருக்கிற இளைஞர்களைப் பத்தி ஆல்பமா உருவாக்கியிருக்கோம். ‘ஆல்பம்’னாலே யு டியூப்ல போடறதுக்குதான் அதிகமா உருவாக்கிறாங்க. இந்த ஆல்பத்தை சாதாரணமா இல்லாம, ஒரு திரைப்படத்துல வர்ற பாடல்கள் மாதிரி உருவாக்கியிருக்கோம். சில தொலைக்காட்சிகள்லயும் இந்த பாடல்களை ஒளிபரப்ப பேசிக்கிட்டிருக்கோம்.

தனி இசை ஆல்பத்துக்குன்னு ஒரு தனிப் பாதையை உருவாக்கணும்கற எண்ணத்துலதான் இந்த ஆல்பத்தையே தயாரிச்சிருக்கோம். இதன் மூலமா தனி இசை ஆல்பத்துக்கு தமிழ்ல நல்ல வரவேற்பு கிடைக்கணும்கற ஒரே ஆர்வம்தான், இந்த ‘ஸ்மைல் ப்ளீஸ்’ ஆல்பத்தை நாங்க உருவாக்க காரணம் ” என்கிறார் மகேஷ்.

விரைவில் இந்த ஆல்பம் வெளியிடப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;