‘சைவம்’ படத்தில் பாடகி ஆன உன்னி கிருஷ்ணனின் மகள்!

Unni Krishnan Daughter Turned Singer

செய்திகள் 31-Mar-2014 4:14 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சைவம்’ படத்தில் குழந்தை நட்சத்திரம் சாரா பாடுவதுபோல் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. அந்தப் பாடலுக்கு சாராவின் உருவத்திற்கு ஏற்ற செல்லக் குரல் ஒன்றை தேடி வந்தார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். கடைசியில் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ராவின் குரல்வளம் அவருக்கு ரொம்பவும் பிடித்துப்போக, சமீபத்தில் ‘அழகே... அழகே....’ என்ற அந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடலைப் பாடுவதற்காக உத்ராவுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்தாராம் உன்னி கிருஷ்ணன்.

இந்தப் பாடலைப் பற்றி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குறிப்பிடும்போது, ‘‘உத்ராவின் குரலில் சாராவின் அபிநயத்தில் ‘அழகே அழகே...’ பாடல் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும், இயக்குனர் விஜய்யுடன் இணைந்து நான் பணியாற்றிய அனைத்துப் படங்களுமே இசையில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல’’ என்று கூறினார்.

‘அழகே அழகே...’ பாடலின் டீஸர் இன்று வெளியிடப்படுகிறது. சோனி மியூசிக் நிறுவனம் ‘சைவம்’ படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கிறது. ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;