‘மான் கராத்தே’வுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

Maan Karate Expectation Level

செய்திகள் 31-Mar-2014 12:39 PM IST Chandru கருத்துக்கள்

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மான் கராத்தே’ படம் வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. கடந்த வருடம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சூப்பர்ஹிட்டானது, ‘மான் கராத்தே’வில் முதல்முறையாக சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஜோடி சேர்ந்திருப்பது, அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் ஹிட்டாகி இருப்பது என இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விநியோகஸ்தர்களும் இப்படத்தை ஆர்வத்துடன் பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பதால் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சிவகார்திகேயனின் இப்படம் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

சென்னையில் மட்டும் 25 திரையரங்குகளுக்கும் அதிகமாக வெளியாகவிருக்கும் ‘மான் கராத்தே’ தமிழகமெங்கும் கிட்டத்தட்ட 350 திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறதாம். சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் தற்போது இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, பரவலாக ‘புக்கிங்’கும் நடைபெற்று வருகிறது. இத்தனை எதிர்பார்ப்புகளையும் ஈடுகட்டும் வகையில் ‘மான் கராத்தே’ ரசிகர்களைக் கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;