விஜய்யின் ‘கத்தி’ ஆல்பம் எப்படி?

How is Vijay's Kathi

செய்திகள் 31-Mar-2014 11:16 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடத்தின் ‘மியூசிகல் பிளாக்பஸ்டர்’ லிஸ்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடிக்கும் ‘கத்தி’ பட ஆல்பம் இடம் பிடிக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் வரிசையாக ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அனிருத் முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதுதான்.

‘கத்தி’ படத்திற்காக மொத்தம் 5 பாடல்களையும், சூப்பரான தீம் மியூசிக் ஒன்றையும் கம்போஸ் செய்திருக்கிறாராம் அனிருத். இதில் வழக்கம்போல் விஜய் பாடும் ஒரு பாடலும் இடம் பிடிக்குமாம். தவிர விஜய்யின் அறிமுகப் பாடலை அனிருத்தும், ஆதியும் இணைந்து பாடியிருக்கிறார்களாம். இப்பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பை சென்னை ஏர்போர்ட்டிலும், ஹைதராபாத்திலும் படமாக்கிவிட்டார்களாம்.

‘கத்தி’யின் பாடல்களை உருவாக்குவதில் அனிருத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாக ஏற்கெனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;