தமிழர் தயாரித்துள்ள ஹாலிவுட் படம்!

Tamilan Direct A Hollywood Film

செய்திகள் 31-Mar-2014 10:20 AM IST Inian கருத்துக்கள்

அமெரிக்க வாழ் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் ‘Blood & Curry’. இவர் அமெரிக்காவில் இருந்தாலும், இங்கிருந்து செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறார். ரஜினி மற்றும் ஷங்கரின் ‘எந்திரன்’ படத்தின் ஹாலிவுட் தொழில்நுட்ப பிரிவின் சிஇஓ வாகவும் பணியாற்றியிருக்கிறார்.

‘Blood & Curry’ படத்தின் கதை பற்றி தயாரிப்பாளர் ஜாக் ஏ ராஜசேகர் கூறியதாவது, ‘‘மனைவி இறந்து கிடக்கிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. அதிர்ச்சியான கணவன் அமெரிக்காவின் அவசர உதவிக்கான 911 எண்ணை உதவிக்கு அழைக்க முற்படுகிறான். அந்த நேரம் பார்த்து வாசலில் காலிங் பெல் ஒலிக்கிறது. கதவு லென்ஸ் வழியாக பார்த்தால், மனைவியால் பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் நிற்கிறார்கள். வேறு வழியில்லாத அந்த கணவன், மனைவியின் உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அவர்களை உள்ளே அழைக்கிறான்.

அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடாதபடி அவன் சமாளிப்பது நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவள் ஏன் இறந்தாள்? அவளது பிணத்தை என்ன செய்தான்? என்பதை படத்தின் முடிவில் அதிர்ச்சியடைகிற விதத்தில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் அதுல் ஷர்மா’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;