ஹீரோயின் ஆகும் ஷங்கரின் குழந்தை நட்சத்திரம்!

Child Artist Turned Heroine

செய்திகள் 31-Mar-2014 10:07 AM IST Inian கருத்துக்கள்

சிவாஜி ஃபிலிம்ஸில் நீண்ட நாட்களாக பணிபுரிந்த ஆம்பூர் ஜே.நேதாஜி, ‘தன்ஷிகா பிக்சர்ஸ்’ மூலம் தயாரிக்கும் படம் ‘எண்ணம் புது வண்ணம்’. கஸ்தூரி ராஜாவிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். இப்படம் பற்றி அவர் கூறும் போது, ‘‘பிறக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் அன்பு தேவை. சரியான தருணத்தில் அந்த அன்பு கிடைக்காமல் போனால் அது அவர்களுடைய தலையெழுத்து, தலைவிதி என்று சொல்லி சமூகம் தன் பொறுப்பை தட்டிக்கழித்தால், அன்பு கிடைக்காமல் போனவர்களால் நம் பாதுகாப்பான வாழ்க்கை பறிபோகும்! அவர்களால் நாம் பாதிக்கப்படுவோம்! என்ற கருவை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.

‘அந்நியன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திவ்யா நாகேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பெங்களூருவை சேர்ந்த விவேக் ஹீரோவாக அறிமுகமாகிறார். பல சூப்பர்ஹிட் பாடல்களை வழங்கிய சௌந்தர்யன் இசையமைக்கிறார். ‘சந்திரமுகி’, ‘சிவகாசி’, ‘பரமசிவம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்யும் இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;