விஜய்யின் அதிரடி முடிவு?

Vijay's Decision

செய்திகள் 31-Mar-2014 10:10 AM IST Chandru கருத்துக்கள்

சமூக வலைதளங்களில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். ஆனால், அவருக்கென அதிகாரப்பூர்வமான டிவிட்டர் அக்கவுண்ட்டோ, ஃபேஸ்புக் பேஜ்ஜோ இதுவரை துவக்கவில்லை. இந்நிலையில், ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் தனக்கென அதிகாரப்பூர்வ கணக்கை நடிகர் விஜய் விரைவில் துவங்கவிருக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.

அதிகாரப்பூர்வமான கணக்கு இல்லை என்றாலும், நடிகர் விஜய்யின் பெயரில் ஏராளமான ஃபேஸ்புக் பக்கங்களையும், ட்விட்டர் கணக்குகளையும் அவரின் ரசிகர்களே நடத்தி வருகின்றனர். இவற்றை லட்சக்கணக்கான ரசிகர்கள் ‘லைக்’ செய்தும், ‘பின்தொடர்ந்து’ம் வருகின்றனர். சமூக வலைதளங்களில் இப்படி தனித்தனியாக சிதறிக்கிடக்கும் தன் ரசிகர் பட்டாளங்களை ஒன்றிணைக்கும் பொருட்டே ‘தனக்கென ஒரு அதிகாரப்பூர்வமான கணக்கை துவக்குவது’ என்ற அதிரடி முடிவை மேற்கொண்டிருக்கிறாராம் விஜய். இதனால் அவர் பெயரில் தற்போது இயங்கிவரும் அனைத்து ஃபேஸ்புக் பக்கங்களையும் ஒன்றிணைத்து ஒரே ஃபேஜ்ஜாக மாற்றி, அதை தனியாக தன் கவனத்தின் கீழ் செயல்பட வைக்கப்போகிறாராம். அப்படி அவர் செய்யும் பட்சத்தில் ஃபேஸ்புக்கில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் சினிமா பிரபலங்கள் பட்டியலில் முன்னணிக்கு வருவார் என்றும் கூறுகிறார்கள். இதைப்பற்றிய அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;