நடிகை சீதாவின் தந்தை காலமானார்!

Actress Seetha Father Passes Away

செய்திகள் 29-Mar-2014 2:53 PM IST VRC கருத்துக்கள்

'ஆண் பாவம்' படதின் மூலம் அறிமுகமாகி தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உட்பட முன்னூறு படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் நடிகை சீதா. அவரது தந்தை பி.எஸ்.மோகன்பாபு, வயது 78. இவர் 'எல்லைக்கோடு' படத்தில் வில்லனாக அறிமுகமாகி தொடர்ந்து மருதுபாண்டி, சேலம் விஷ்ணு, தங்கைக்கு ஒரு தாலாட்டு, அண்ணன் காட்டிய வழி, புதியபாதை, மலரே குறுஞ்சி மலரே போன்ற படங்களில் நடித்தவர். மற்றும் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார். இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும், பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் சீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 3.30 மணியளவில் போரூரில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;