’ஃபேஸ்புக்’கில் பிரபலமாகும் பிரபலங்கள்!

Popular Stars in Facebook

செய்திகள் 29-Mar-2014 2:21 PM IST VRC கருத்துக்கள்

கோலிவுட் பிரபலங்களை விட மற்ற மாநில சினிமா பிரபலங்கள் தான் டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற நவீன சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வ அக்கவுட் வைத்துக் கொள்வதில் முன்னிலையில் இருந்து வந்தார்கள்! ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த கோலிவுட்டினர் தற்போது அதன் வலிமையை உணர்ந்திருப்பதால் ஒவ்வொருவராக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் தங்களுக்கு அதிகாரபூர்வ கணக்குகளை உருவாக்கி வருகிறார்கள்! இதற்கு முக்கியமான மற்றொரு காரணமும் இருக்கிறது! அதாவது, தங்களது பெயரில் போலியான கணக்குகளை ஆரம்பித்து பல பிரச்சனைகளை, இடைஞ்சல்களை உருவாக்கும் நபர்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும்தான்!

கோலிவுட்டில் ஏற்கெனவே கமல்ஹாசன், அமலா பால், அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தா, டி.இமான் போன்ற பல முன்னணி கலைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக கணக்குகளை வைத்துக் கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு அதிகாரபூர்வமாக டுவிட்டரில் இணைந்தார்! இதனை தொடர்ந்து இப்போது அதிகாரபூர்வமாக இணைந்திருக்கும் மற்ற இரண்டு பிரபலங்கள் இசைஞானி இளையராஜா https://www.facebook.com/itsmeIlaiyaraaja மற்றும் காமெடி நடிகர் சந்தானம் https://www.facebook.com/ISanthanam. இது தவிர ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்திற்கும் ஃபேஸ்புக்கில் தனிப்பட்ட அக்கவுண்டை துவங்கியிருக்கிறார்கள் https://www.facebook.com/Kochadaiiyaan.

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் மாபெரும் பயன்பாடு குறித்து இப்போது தான் நிறைய பேருக்கு தெரிய வருகிறது போலும்! இனி வரும் நாட்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலைமை தான் வரப்போகிறது! அதில் எந்த சந்தேகமும் இல்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;