அஜித் கெளதம் மேனன் படம் - உண்மை நிலவரம்!

Gautham Menon Clarify our Project

செய்திகள் 29-Mar-2014 11:05 AM IST VRC கருத்துக்கள்

அஜித், கௌதம் மேனன் இணையும் படம் குறித்த தகவல்களை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இப்படத்தில் அஜித்துடன் முக்கிய கேர்கடரில் இயக்குனர் கௌதம் மேனனும் நடிக்கிறார், இன்னொரு முக்கிய கேரக்டரில் கராத்தே வீரர் ஷிஹான் ஹுசைனி நடிக்கிறார், அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார், இல்லை… இல்லை அனுஷ்கா நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக இப்போது எமி ஜாக்‌சன் கமிட் ஆகியிருக்கிறார் இப்படி மீடியாக்களில் பலவாறான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன!

இந்நிலையில் ஷிஹான் ஹுசைனி, ‘‘அஜித் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர், அதுமாதிரி இயக்குனர் கௌதம் மேனனும் என்னை கவர்ந்த இயக்குனர் ஆவார்! ஆனால் இவ்விருவர் இணையும் படத்தில் நான் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை! இதுவரை இது சம்பந்தமாக என்னை யாரும் தொடர்புகொண்டதில்லை’’ என்று சமீபத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்! இதனை தொடர்ந்து இப்போது இயக்குனர் கௌதம் மேனனும், ‘’தான் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக வரும் செய்திகளில் சிறிதும் உண்மையில்லை! யாரோ கற்பனையாக உருவாக்கப்பட்ட செய்தி அது’’ என்று மறுத்தவர், ‘ ‘இந்தப் படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியாகிற செய்திகளை யாரும் நம்பவேண்டாம்’’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;