ஹரி படத்தில் கௌசல்யா!

Kausalya is Back

செய்திகள் 28-Mar-2014 4:32 PM IST VRC கருத்துக்கள்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த கௌசல்யா, தமிழில் கடைசியாக நடித்த படம் ‘சநதோஷ் சுப்ரமணியம்’. 2008-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட கௌசல்யா, கிட்டத்தட்ட 5 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்து, தயாரிக்கும் ‘பூஜை’ படத்தில் கௌசல்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஹரி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன நல்ல நேரம் என்னவோ, கௌசல்யாவுக்கு மற்றும் சில படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம்! ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கௌசல்யா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;