’திருசியம்’ 100-ஆவது நாள்!

Drishyam Completes 100 Days

செய்திகள் 28-Mar-2014 12:02 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்த படம் ‘திருசியம்’. கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான இப்படம், இன்று 100-ஆவது நாளை எட்டியுள்ளது. ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த இப்படம், சென்னையிலும் அதே நாளில் வெளியாகி இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது! இந்திய சினிமா உலகையே பேச வைத்த இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில், அதே ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் உருவாக இருப்பது எல்லோருக்கும் தெரியும்! இதன் தெலுங்கு மற்றும் கன்னட ரீ-மேக்கின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், ஹிந்தியிலும் இப்படம் ரீ-மேக் ஆக இருக்கிறது! கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படு, பல கோடி ரூபாய் வசூல் செய்த இப்படத்தின் வெற்றி மொத்த சினிமா உலகினரையும் சிந்திக்க வைத்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;