ஏப்ரல் 4-ல் மோதும் 5 படங்கள்!

ஏப்ரல் 4-ல் மோதும் 5 படங்கள்!

செய்திகள் 27-Mar-2014 4:10 PM IST VRC கருத்துக்கள்

’தகராறு’ படத்தை தொடர்ந்து அருள்நிதி நடித்துள்ள ’ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படமும் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது! சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் அருள்நிதியுடன் பிந்துமாதவி, அஷ்ரிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார்கள்! ‘மேக்னா மூவீஸ்’ பேனரில் மு.க.தமிழரசு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசை அமைத்திருக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்! இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் விநியோக உரிமையை ’ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் பெற்றுள்ளது! வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது!

அன்றைய தினம் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ’மான் கராத்தே’, எம்.ஆர்.ராஜீவன் இயக்கியுள்ள ‘கூட்டம்’, சிவசண்முகன் இயக்கியிருக்கும் ‘எப்போதும் வென்றான்’, சலங்கை துரை இயக்கியுள்ள ’காந்தர்வன்’ ஆகிய படங்களும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - ஏண்டி ஏண்டி பாடல் வீடியோ


;