நாளை ரிலீசாகும் படங்கள் என்னென்ன?

நாளை ரிலீசாகும் படங்கள் என்னென்ன?

செய்திகள் 27-Mar-2014 2:04 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வாரம், வெள்ளிக் கிழமையன்று, அதாவது 21-ஆம் தேதி 5 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின! ஆனால், அந்த 5 படங்களில் ‘குக்கூ’ மட்டுமே ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது! சென்ற வாரத்தை தொடர்ந்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம் ’இனம்’. இலங்கை பின்னணியில் கதை சொல்லப்படும் இப்படத்தில் கருணாஸ், சரிதா முதலானோர் நடித்திருக்க, லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது.

‘சிலுன்னு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியிருக்கும் படம் ‘நெடுஞ்சாலை’. இப்படத்தில் ஆரி, ஷிவதா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். சி.சத்யா இசை அமைத்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. புதுமுகங்கள் நடித்த படம் இது என்றாலும் கோலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம்!

அடுத்து இளையராஜா இசை அமைக்கும் 999-ஆவது படம் என்ற விளம்பரத்தோடு ‘ஒரு ஊர்ல’ என்ற படமும் நாளை ரிலீசாகிறது. இந்தப் படத்தை கா.ச.வசந்தகுமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தை ‘விக்னேஷ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் பி.வேலுச்சாமி தயாரிக்க, இப்படத்திலும் முக்கிய கேரக்டர்களில் புதுமுகங்களே நடித்திருக்கிறார்கள்.

நாளை வெளியாகும் இன்னொரு படம் ‘மறுமுனை’. மாரிஷ் குமார் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திலும் புதுமுகங்களே நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்காக நடிகர் சிம்பு, ‘பெண்ணே பெண்ணே…’ என துவங்கும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்ற விளம்பரத்துடன் இப்படம் நாளை வெளியாகிறது.

இந்தப் படங்கள் தவிர தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள ‘வேங்கைப்புலி’ என்ற படமும், ‘ஏர்பிளேன் V/S வொல்கனோ’ என்ற ஆங்கில படமும் நாளை ரிலீசாகும் படங்களின் பட்டியலில் இடம் பிடித்த படங்களாகும்!
மேற்குறிப்பிட்ட படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெறும், அதிக நாட்கள் ஓடும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டீசர்


;