‘விஸ்வரூபம் 2’வை முந்தும் ‘உத்தம வில்லன்’?

‘விஸ்வரூபம் 2’வை முந்தும் ‘உத்தம வில்லன்’?

செய்திகள் 27-Mar-2014 12:20 PM IST Chandru கருத்துக்கள்

‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகம் உருவானபோதே இரண்டாம் பாகத்திற்கான வேலைகளும் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட ‘விஸ்வரூபம் 2’வின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த கோடை விடுமுறைக்கு எப்படியும் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்த ‘விஸ்வரூபம் 2’ படத்தின் வேலைகள் இன்னமும் மீதமிருப்பதால், குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்கிறார்கள்.

இந்நிலையில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது பிஸியாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்காக 90 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கமல். ஒரே ஷெட்யூலில் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு, மே மாதம் முதல் வாரத்திலிருந்து அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்கிவிடுமாம்.

‘விஸ்வரூபம் 2’ படம் டெக்னிக்கலாக மிகப்பிரம்மாண்டமாக வர வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருவதால் கொஞ்சம் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை, ஆனால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என கமல் நினைப்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதல் காலத்தை அதற்காக ஒதுக்கியிருக்கிறார்களாம். எனவே, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் ‘உத்தம வில்லன்’ படத்தை விரைவாக முடித்து முதலில் அதை ரிலீஸ் செய்யும் திட்டமும் கமலிடம் இருக்கிறதாம். அதோடு ஜூன் முதல் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறாராம் உலகநாயகன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;