ஹரி, விஷால், ஸ்ருதிஹாசன் இணையும் பூஜை!

ஹரி, விஷால், ஸ்ருதிஹாசன் இணையும் பூஜை!

செய்திகள் 27-Mar-2014 10:17 AM IST VRC கருத்துக்கள்

விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீசாவதை தொடர்ந்து, ஹரி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால்! இந்தப் படத்திற்கு ‘பூஜை’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, முகேஷ் திவாரி, தலைவாசல் விஜய், ஜெயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சித்தாரா, அபிநயா, கௌசல்யா, ரேணுகா, ஐஸ்வர்யா, சார்லி, மனோபாலா, ஜானகி சபேஷ், சந்தான பாரதி, கராத்தே ராஜா, பிளாக் பாண்டி முதலானோரும் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, பாடல்களை நா. முத்துக்குமார் எழுதுகிறார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை அமைப்பை கதிர் கவனிக்க, படத்தொகுப்பை வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய் கவனிக்கிறார்கள். சண்டை காட்சிகளை கனல் கண்ணன் அமைக்கிறார்.

‘தாமிரபரணி’ படத்திற்குப் பிறகு விஷால் – ஹரி மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஹிட் ஆன ‘சிங்கம் 2’ படத்திற்கு பிறகு ஹரி இயக்கும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;