‘குக்கூ’ இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

‘குக்கூ’ இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

செய்திகள் 27-Mar-2014 10:01 AM IST Chandru கருத்துக்கள்

ராஜு முருகன் இயக்கிய ‘குக்கூ’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இயக்குனர் ராஜு முருகன், நடிகர் தினேஷ், நடிகை மாளவிகா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ‘குக்கூ’ படத்தில் பணியாற்றியவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுதிய பத்திரிகைகள், படம் பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள், படத்தில் பணியாற்றியவர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது ‘குக்கூ’ டீம்.

அதோடு ‘குக்கூ’ படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குனர் ராஜு முருகனை சந்தோஷப்படுத்தும் விதமாக ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் கார் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ராஜு முருகன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தையும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. காரையும் பரிசாகக் கொடுத்து, அடுத்த படத்திற்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் ‘ஜாக்பாட்’ அடித்த சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;