விஷால் படத்துடன் மோதும் வடிவேல் படம்!

Vishal and Vadivelu Movies Clash

செய்திகள் 26-Mar-2014 1:01 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்க, ரசிகர்களின் தற்போதைய கேள்வி படம் எப்போது ரிலீஸ்? என்பதுதான்! தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 11-ஆம் தேதி ‘கோச்சடையான்’ படம் ரிலீசாகவிருக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸை இன்னும் சில நாட்களுக்கு, அதாவது மே மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

‘கோச்சடையான்’ படத்தின் ரிலீஸ் தாமதமாவதால் ஏப்ரல்-11 என்று ரிலீஸ் தேதி குறித்த விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’ ஆகிய படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டீசர்


;