ஜெயா டிவியில் ரஜினிகாந்த் பேட்டி!

Rajinikanth Interview Soon

செய்திகள் 26-Mar-2014 12:15 PM IST Inian கருத்துக்கள்

'கோச்சடையான்' படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, பட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே மிகப்பெரிய அளவில் மொபைல்ஃபோன் மூலம் படத்தை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். தற்போது இதன் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் ஜெயா டிவிக்காக பிரத்தியேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்! விவேக்குடன் உரையாடும் இந்தப் பேட்டி 1 மணி நேரம் படமாக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் பேட்டியுடன் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தொகுப்பு, படம் படமாக்கபட்ட விதம், படத்தில் நடித்தவர்களின் அனுபவம் ஆகியவை வரும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல்-14) சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;