சம்மரில் கலக்க இருக்கும் காமெடி ஹீரோக்கள்!

Summers Special Movies

செய்திகள் 26-Mar-2014 12:05 PM IST VRC கருத்துக்கள்

இந்த கோடை விடுமுறை காலம் சினிமா ரசிகர்களுக்கு வசந்தகாலமாக அமையப்போகிறது! பெரிய நடிகர்கள் நடித்த பல படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் சில முன்னணி காமெடி நடிகர்கள் கதையின் நாயகனாக நடித்த படங்களும் கோடை விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. அதில் முதல் படம், ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அதுமாதிரி ’எவர்கிரீன்’ காமெடி நடிகரான கவுண்டமணி ஹீரோவாக நடித்திருக்கும் ‘49ஓ’ படமும் சம்மர் ட்ரீட்டாக வெளிவர இருக்கிறது இந்தப் படங்களுடன் ரசிகர்கள் மட்டுமல்லாம்ல் மொத்த கோலிவுட்டையே எதிர்பார்க்கும் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படமும் சம்மர் விருந்தாக வருகிற 4-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படங்களுடன் சந்தானம் நடிக்கும் ‘வாலிபராஜா’ படமும் சம்மர் ரிலீஸ் களத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆக, நான்கு பெரிய காமெடி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட வைக்கப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;