சோனி நிறுவனம் வாங்கிய 'ஐ'!

Ai Audio Rights to Sony Music

செய்திகள் 26-Mar-2014 11:44 AM IST Inian கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'ஐ'. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தன்னுடைய இசையமைப்பில் 90களில் வெளிவந்த ‘பாம்பே’, ‘காதலன்’, ‘ஜென்டில் மேன்’, ‘முத்து’ பாடல்கள் மாதிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளாராம்.

சீனாவில் படம்பிடிக்கப்பட்டுள்ள காதல் பாடல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அழகான சூழலில் படமாக்கபட்டுள்ளதாம். பிரம்மாண்டத்தின் பிரம்மாணடமாக இப்பாடல் இருக்கும். மிகப்பெரிய வெற்றியும் பெறும் என்கிறார் பாடலை எழுதியுள்ள மதன்கார்க்கி.

இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெரிய விலைகொடுத்து வாங்கியுள்ளது. மே மாதம் இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகளை மும்மரமாக செய்து வருகிறது ஆஸ்கார் நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;