‘இனம்’ ஒரு உலகத் திரைப்படம்!

Inam a world movie

செய்திகள் 26-Mar-2014 11:17 AM IST Chandru கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இனம்’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இப்படத்தை லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று இரவு சென்னை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த சிறப்புக்காட்சிக்கு தமிழ்சினிமாவின் முன்னணி பிரலபலங்கள் பலரும் வருகை தந்து படம் பார்த்துவிட்டு பெரிதும் பாராட்டினர். ‘காவியத்தலைவன்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் வசந்தபாலனும் இப்படத்தை நேற்று கண்டுகளித்தார். படம் பார்த்துவிட்டு ‘இனம்’ குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் வசந்தபாலன். அது இங்கே அப்படியே....

‘‘நேற்று இரவு சத்யம் திரையரங்கில் ஸ்பெசல் காட்சியாக திரையிடப்பட்ட சந்தோஷ்சிவனின் இனம் திரைப்படத்தைப் பார்த்தேன். சந்தோஷ் சிவன் இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளருள் ஒருவர். தளபதி, ரோஜா, இருவர், சிறைச்சாலை, உயிரே, இந்திரா போன்ற படங்கள் அவரின் ஒளிப்பதிவு தனி ஆளுமை. அவரின் இயக்கத்தில் டெரரிஸ்ட், மல்லி, அசோகா, உறுமி, நவரஸா போன்றவை தனி ரகம்.

நம் கண்முன் நடந்த இனப்படுக்கொலை நம்முள் யாரும் திரைப்படமாக எடுக்க துணியவில்லை... துணிவில்லை! சந்தோஷ்சிவன் எடுக்க துணிந்தது பாராட்டக்குரியது. அதை வெளியிட துணிந்த லிங்குசாமி பாராட்டப்பட வேண்டியவர். இந்த படம் சென்சார் ஆகி தமிழகத்தில் ரிலீஸ் ஆவதே அதிசயம்.

அழகான வசனங்கள் படம் நெடுக...
‘‘சமமாக இருக்கிறவனோட மோதுங்கடா அதான்டா சண்டை...’’
‘‘விழி தொறந்தே இறந்து கிடந்தால் திரும்பி வருவாங்களாம்... அப்படின்னா தலைவர் திரும்பி வருவாரா...’’
‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்..கே..ளி...ர்.’’

இலங்கையின் ஒரு சிறு கிராமத்தின் ஓரிடத்தில் போர் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதை அந்த மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம் பேசுகிறது,

ஒரு உலக திரைப்படவிழாவில் ஒரு படம் பார்க்கும் மனநிலையில் இந்த படத்தை பார்க்க வேண்டும்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - களவாணி பாடல் வீடியோ


;