ஹேப்பி பர்த்டே மதுபாலா!

Happy Birthday Madhu Bala

செய்திகள் 26-Mar-2014 10:46 AM IST VRC கருத்துக்கள்

‘அழகன், ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ போன்ற பல படங்களின் மூலம் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மதுபாலா! தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலாக பல படங்களில் நடித்த மதுபாலா, திருமணம் புரிந்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்! இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருந்தவரை, இயக்குனர் பாலாஜி மோகன் அழைத்து வந்து தனது ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நடிக்க வைத்து சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்! தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டை ஆவலாய் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மதுபாலாவுக்கு இன்று ஸ்பெஷல் டே! அதாவது அவர் பிறந்த நாள் இன்று!

‘வாயை மூடி பேசவும்’ படத்தை தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று மதுபாலாவை வாழ்த்துவதோடு, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதிலும் ‘டாப் 10 சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரூபாய் - டிரைலர்


;