இயக்குனராகும் நடிகர்!

Actor Turn Director

செய்திகள் 26-Mar-2014 10:15 AM IST Inian கருத்துக்கள்

இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், விக்ரமன், கஸ்தூரிராஜா, சுசீந்திரன், சமுத்திரக்கனி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றிய திலீபன், சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்த ‘போராளி’ படத்தில் குடிகார குமார் என்ற கதாபத்திரத்தில் நடித்து நடிகரானார். இதன் பிறகு ‘குட்டிப்புலி’, ‘புலிவால்’, ‘நிமிர்ந்து நில்’ உட்பட பல படங்களில் நடித்து பாராட்டை பெற்றவர், முதன் முதலாக “வெள்ளை குதிரையில் ராஜகுமாரன்” என்ற படத்தினை இயக்கி இயக்குனராகியிருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் போராளி திலீபன் நடிக்கவில்லை.

‘‘என்னை நல்ல நடிகனாக்கிப் பார்த்த என் குருநாதர் சமுத்திரகனி அவர்களுக்கு என் ஆயுள் முழுக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்’' என்கிறார் திலீபன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏமாளி - டீசர்


;