அஜித் படத்தில் ஷிஹான் ஹுசைனி!

Shihan Hussaini in Ajith film

செய்திகள் 25-Mar-2014 4:23 PM IST RM கருத்துக்கள்

‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அல்லவா? ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் டபுள் ரோலில் நடிக்கிறார் என்றும் இப்போது அந்த கேரக்டர்களுக்கான ஹோம் வொர்க்கில் அஜித் படு பிசியாக இயங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது! அடுத்த மாதம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ள இப்படத்தில் அஜித்துடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் கராத்தே வீரர் ஷிஹான் ஹுசைனியும் நடிக்கிறார். ஏற்கெனவே பல படங்களில் நடித்துள்ள ஹுசைனி, விஜய் நடித்த ’பத்ரி’ படத்தில் விஜய்க்கு கிக் பாக்சிங் கற்றுத் தரும் பயிற்சியாளராக நடித்திருந்தார். இப்போது அஜித் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கும் படமும் ஆக்‌ஷனை மையப்படுத்தி எடுக்கப்படவிருக்கும் படம் என்று கூறப்படுகிறது. ‘பத்ரி’ படத்தில் விஜய்க்கு
‘கோச்’ ஆக நடித்த ஹுசைனி இப்படத்தில் அஜித்துடன் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;