சூர்யாவுக்கு ‘அஞ்சான்’ 6-வது படம்!

6th Movie for Suriya

செய்திகள் 25-Mar-2014 3:13 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா – லிங்குசாமி இணைந்துள்ள ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, இப்படம் சம்பந்தமான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன! லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் இப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார்! ஏற்கெனவே பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் ஆகிய படங்களில் டபுள் ரோலில் நடித்து அசத்திய சூர்யா, இப்படத்தில் அதிலிருந்தெல்லாம் மாறுபட்ட வகையில் இரண்டு கேரக்டர்களில் தோன்றி அதகளம் பண்ணவிருக்கிறாராம்! ஆக மொத்தத்தில், ‘அஞ்சான்’ சூரயாவுக்கு 6-வது இரட்டை வேட படம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் எல்லா படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தது.

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் முதன் முதலாக சமந்தா ஜோடி சேர்ந்திருக்க, ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், இசைக்கு யுவன் சங்கர் ராஜா என பெரும் கூட்டணியில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு, படத்தின் படப்பிடிபு மற்றும் இதர வேலைகளை துரிதமாக நடத்தி வருகிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;