ஷங்கர் வழியில் அட்லீ!

Atlee Follows Shankar

செய்திகள் 25-Mar-2014 2:59 PM IST VRC கருத்துக்கள்

அட்லீ இயக்கிய, ’ராஜா ராணி’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றிபெற, இக்கதை அடுத்து ஹிந்தியிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது. ஹிந்தி ரீ-மேக்கையும் அட்லீயே இயக்க இருக்கிறார். அட்லீயின் குருநாதரான ஷங்கர் தமிழில் ஒரு சில படங்களை இயக்கிய பிறகே பாலிவுட்டிற்கு சென்று ‘முதல்வன்’ படத்தின் ரீ-மேக் ஆக ‘நாயக்’ படத்தை இயக்கினார்! ஆனால் அவரது சிஷ்யர் அட்லீக்கு தனது முதல் படத்தின் மூலமே பாலிவுட்டில் என்ட்ரியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், அட்லீ தனது இரண்டாவது படமாக ஒரு தமிழ் படத்தை இயக்கவே விரும்புகிறார். இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் அட்லீ, இந்தப் படத்தை முடித்த பிறகே ’ராஜா ராணி’யின் ஹிந்தி ரீ-மேக்கை இயக்குவாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ - டீசர்


;