Exclusive: விஜய், முருகதாஸ் பட தலைப்பு !

Exclusive update on vijay murugadoss movie

செய்திகள் 25-Mar-2014 2:02 PM IST VRC கருத்துக்கள்

’துப்பாக்கி’யை தொடர்ந்து விஜய், ஏ.அர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்திற்கான தலைப்பு முடிவாகாமல் இருந்தது அல்லாவா? இப்போது படத்திற்கு ‘கத்தி’ என்று பெயர் வைத்திருப்பதாகவும், அதை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளார்கள் என்றும் நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வருகிற தமிழ் புத்தாண்டு அன்று கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது! அத்துடன் இந்தப் படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதில் சிவானந்தம் என்ற நல்லவர் கேரக்டர் ஒன்று! இன்னொன்று கொல்கத்தாவை சேர்ந்த ரௌடி கேரக்டர்! இந்த இரண்டு கேரக்டர்களுக்கிடையில் நடக்கும் கதையாம் கத்தி! ‘துப்பாக்கி’ ஹிட் அடித்த சென்டிமென்டை தொடர்ந்து இந்தப் படத்திற்கு ஏ.அர்.முருகதாஸ் ‘கத்தி’ என்று ‘ஷார்ப்’ ஆன ஒரு டைட்டிலை வைத்திருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவன் - டிரைலர்


;