பிரத்தியேக பயிற்சி பெறும் சந்தானம்!

Santhanam's special training

செய்திகள் 25-Mar-2014 10:03 AM IST Inian கருத்துக்கள்

பி.வி.பி சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் Hand made films தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ' வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ' படத்தின் First look சந்தானத்தின் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரை உலகில் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பராக நடித்து , அவர்களுக்கு நண்பராகவே மாறி விட்ட சந்தானத்துக்கு ' வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் First look பற்றிய அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம்.

சந்தானம் இந்தப் படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.' வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் தயாரித்து வரும் ஜனரஞ்சகமான படமாகும் என்று கூறுகிறார் நகைச்சுவை நடிகரும், இந்தப் படத்தின் இயக்குனருமான ஸ்ரீநாத்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;