‘வடகறி’யிலிருந்து வெளியேறிய யுவன்!

Yuvan Out of Vadacurry

செய்திகள் 25-Mar-2014 9:57 AM IST Chandru கருத்துக்கள்

ஜெய், சுவாதி நடிப்பில் சரவணா ராஜன் இயக்கும் ’வடகறி’ படத்தை தயாரிக்கிறது துரை தயாநிதியின் மீகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. ‘வடகறி’ படத்திற்காக ஒரு மெலடிப் பாடலையும் ஏற்கெனவே கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறார். தற்போது, இப்படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா விலகியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு...

‘‘வடகறி படத்திற்காக அனைவரும் இதுவரை கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. யுவன் ஷங்கர் ராஜா மற்ற படங்களில் பிஸியாக வேலை செய்து கொண்டிருப்பதாலும், ‘வடகறி’ படத்திற்கு அவரால் நேரம் ஒதுக்கி பணியாற்ற இயலாததாலும் அவருடன் எங்களால் தொடர்ந்து இணைந்து பணியாற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, இருதரப்பிலும் சுமூகமாக பேசி தீர்வு கண்டுள்ளோம். ‘வடகறி’ படத்திற்கு யுவன் ஏற்கெனவே போட்டுக்கொடுத்தாத அற்புதமான ஒரு மெலடிப் பாடலை மட்டும் படத்தில் பயன்படுத்த இருக்கிறோம். மீதியுள்ள பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் வேறு ஒரு இசையமைப்பாளரை தேடி வந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் விவேக் சிவா எனும் சவுண்ட் இன்ஜினியர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். அனிருத்தின் இசையமைப்பில் உருவான ‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘இரண்டாம் உலகம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்களில் விவேக் சிவாவும் பணிபுரிந்திருக்கிறார்.

விவேக் சிவாவுடன், மெர்வின் சாலமன் என்பவரும் இணைந்து ‘வடகறி’ படத்திற்காக நான்கு பாடல்களை கம்போசிங் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதுதவிர படத்தின் பின்னணி இசைப் பணிகளையும் இவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். இருவரும் உருவாக்கிக் கொடுத்த அந்த 4 பாடல்களும் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. நிச்சயம் இவர்களின் இசை உங்களுக்கும் பிடிக்கும். திறமையான இந்த இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அனிருத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் தயாநிதி அழகிரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;