விஷாலின் பக்கா ப்ளான்!

Vishal new plan

செய்திகள் 24-Mar-2014 4:24 PM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே ‘தாமிரபரணி’ படத்தில் இணைந்த ஹரியும், விஷாலும் மிண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்! முக்கோண காதல் கதை என்று சொல்லப்படுவது மாதிரி, இந்த படம் முக்கோண ஆக்‌ஷண் கதையாக உருவாக இருக்கிறதாம்! படத்தின் கதை கோவைவில் அரம்பித்து பீகார் மாநிலம் பாட்னாவில் முடிகிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறதாம். ‘சிங்கம் 2’ அதிரடி ஆக்‌ஷன் படத்திற்குப் பிறகு ஹரி இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை அமைக்கும் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து ஆறு பாடல்களை வாங்கி விட்டாராம் இயக்குனர் ஹரி! பாடல்களை நா.முத்துக்குமார் எழுத, அந்தப் பாடல்களில் ஒரு பாடலை படத்தின் கதாநாயகி ஸ்ருதிஹாசனே பாடவிருக்கிறாராம்!

இந்தப் படத்தின் படப்பிடிப்பை விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் வெளியாகிற ஏப்ரல் 11-ஆம் தேதி அன்று துவங்கவிருக்கிறார்கள்! விஷாலின் ’பாண்டியநாடு’ படம் வெளியானதைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி அறிவித்து, ஆரம்பிக்கப்பட்ட படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்போது, ‘நான் சிகப்பு மனிதன்’ வெளியாகிற நாளில் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ள விஷால், இப்போது சினிமாவில் பக்கா ப்ளானோடு பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமில்லை அச்சமில்லை - டீசர்


;