மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்த ஹீரோ!

Akshay Kumar Join Again With Prabhu Deva

செய்திகள் 24-Mar-2014 12:27 PM IST VRC கருத்துக்கள்

பிரபுதேவா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்து ஹிட் ஆன ஹிந்தி படம் ‘ரௌடி ரத்தோர்’. 2012-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபுதேவாவும், அக்‌ஷய் குமாரும் இணைகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அக்‌ஷய் குமார் மற்றும் அஷ்வினி யார்டியின் கம்பெனியான ‘கிராசிங் காட் பிக்சர்ஸ்’ தயாரிக்கவிருக்கிறது. தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தை இயக்கி வரும் பிரபுதேவா இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அக்‌ஷய் குமார் நடிக்கும் படத்தின் வேலைகளில் இறங்க இருக்கிறார்.

‘ரௌடி ரத்தோர்’ படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா! இப்போது பிரபுதேவா இயக்கி வரும் ’ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தில் அஜய் தேவகனுக்கும் ஜோடி சோனாக்‌ஷி சின்ஹா தான்! அடுத்து அக்‌ஷய் குமார் நடிக்கும் படத்தின் ஹீரோயினாக சோனாக்‌ஷியே தேர்வானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! காரணம், சோனாக்‌ஷி பிரபு தேவாவின் ஃபேவரிட் ஆர்ட்டிஸ்ட்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;