’புறம்போக்கு’க்காக 2 கோடி ரூபாய் செட்!

2 Crore set in Purampokku

செய்திகள் 24-Mar-2014 12:04 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் ‘புறம்போக்கு’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்! சமீபத்தில் ஆர்யா, ஷாம் சம்பந்தப்பட்ட ஒரு ஆக்‌ஷன் காட்சியின் படப்பிடிப்பை பெங்களூரில் படம் பிடித்து வந்த எஸ்.பி.ஜனநாதன், அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜெயில் போன்ற ஒரு செட்டில் நடத்த இருக்கிறார். இதற்காத கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஜெயில் செட்டை உருவாக்கி வருகிறார்கள். இந்த செட், ‘மதராசப்பட்டணம்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய செல்வகுமார் கைவண்ணத்தில் உருவாகி வருகிறது. அர்யா, விஜய் சேதுபதி, ஷாம், காத்திகா நாயர் சம்பந்தப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை இங்கு படம் பிடிக்க இருக்கிறார்கள்! இதற்காக கதையின் நாயகியாக நடிக்கும் கார்த்திகா நாயர் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்று வருகிறாராம்! ‘யுடிவி’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;