ஷங்கரின் ‘ஐ’ லேட்டஸ்ட் தகவல்கள்!

Shankar's Ai Movie Details

செய்திகள் 24-Mar-2014 10:56 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் படம் என்றால் எதிர்பார்ப்பை பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால், எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சும் அளவில் ‘ஐ’ படம் இருக்கும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார். ரொமான்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்திற்காக ‘ஹாபிட்’ போன்ற படங்களில் மேக்-அப் பணிகளைக் கவனித்த ‘வேட்டா’ நிறுவனம் ‘ஐ’ படத்தில் பணியாற்றுகிறது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து, இந்தியா முழுவதுமான பார்வை இப்படத்தின் மீது திரும்பி இருக்கிறது.

‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ போன்ற படங்களில் சமூக பிரச்சனைகளையும், ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் காதலையும், ‘எந்திரன்’ படத்தில் சயின்ஸ் ஃபிக்ஷனையும் மையப்படுத்தி படமெடுத்த ஷங்கர், ‘ஐ’ படத்திற்காக இதுவரை போகாத ரூட்டில் பயணித்திருக்கிறாராம். படத்தின் 30 சதவிகித படப்பிடிப்பை சீனாவில் நடத்தியிருக்கிறார்கள். ‘ஐ’ படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சீனாவிற்கு ‘டேக் ஆஃப்’ ஆகி, இடைவேளை வரை அங்கேதான் பயணிக்குமாம். பெரிய பெரிய பூக்கள் நிறைந்த ஏரியாக்களில் நிறைய தூரம் பயணம் செய்து படமாக்கியிருக்கிறாராம். ‘அந்நியன்’ படத்தில் வரும் ஆம்ஸ்டர்டாம் தோட்டத்தைவிட இதில் வரும் பூந்தோட்டங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்குமாம்.

அதோடு ‘மென் இன் ப்ளாக்’கில் வேலை பார்த்த மேரி வாட், ‘ஐ’ படத்தில் ஒரு பாடல் பண்ணியிருக்கிறாராம். இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக உடலை மெலிய வைத்துள்ள விக்ரம், மேக்-அப் கலைஞர்களின் வேண்டுதலுக்கிணங்க தலையையும் மொட்டையடித்திருக்கிறார். படத்தில் வரும் அந்தக் கேரக்டர் மிகவும் பேசப்படும் என்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

விக்ரமிற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை கோடைவிடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;