பாடல்களோடு வருகிறார் தெனாலி ராமன்!

Jagajala Pujabala Tenaliraman Audio soon

செய்திகள் 22-Mar-2014 5:42 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் வடிவேலுவின் ரீ-என்டிரி படமான ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ’ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்க, டி.இமான் இசை அமைக்கிறார். ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித் நடித்திருக்க, இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் ராதா ரவி, மனோபாலா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;