’மான் கராத்தே’ எப்போது ரிலீஸ்?

Maan Karate Release Date Conformed

செய்திகள் 22-Mar-2014 3:02 PM IST Top 10 கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'மான் கராத்தே'. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரு மடங்காகி உள்ளது. ரசிகர்களிடையே இப்போது எழுந்துள்ள கேள்வி படம் எப்போது ரிலீஸ்? என்பதுதான்! இந்த கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக இப்படக்குழுவினரும் ரிலீஸ் தேதிதியை அறிவித்திருக்கிறார்கள்! வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்! அதற்கு முன்னதாக வருகிற 26-ஆம் தேதி படம் சென்சார் செய்யப்படவிருக்கிறது. ஆக, ’மான் கராத்தே’வின் ’கவுண்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆனது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;