சென்னையில் இடம் பொருள் ஏவல்!

Idam Porul Eval Next Schedule

செய்திகள் 22-Mar-2014 11:47 AM IST VRC கருத்துக்கள்

‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இப்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் முடிவடையுமாம்! இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நந்திதா நடித்து வருகிறார். பாடல்களை கவியரசு வைரமுத்து எழுத, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ’நீர்ப்பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம், சீனுராமியும், விஜய் சேதுபதியும் இணையும் முதல் படம், யுவன் – வைரமுத்து இணையும் படம் என பல ஸ்பெஷல்கள் உள்ள இப்படத்தின் மீது இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;