’வழக்கு எண் 18/9’ பட்டறையிலிருந்து இன்னொரு படம்!

Balaji Sakthivel asst directors film

செய்திகள் 21-Mar-2014 2:45 PM IST Top 10 கருத்துக்கள்

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களில் உதவியளராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கும் படம் ’13’. இந்தப் படத்தில் மனோஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷீரா என்ற புதுமுகம் நடிக்கிறார். ஷீராவின் பெண் குழந்தைகளாக சதன்யா, ஸ்ரீவர்ஷினி ஆகிய இரு குழந்தைகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக டி.செந்தில், ‘ஆர்.கே.என்டர்டெய்னர்ஸ்’ சார்பாக ஆர்.கே.யோகேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

பாலாஜி சக்திவேலின் சினிமா பட்டறையிலிருந்து வெளியே வந்து படம் இயக்கும் முதல் மாணவராம் சுரேஷ்! ‘‘ பொதுவாக ‘13’ ன்னாலே அதிர்ஷ்டம் இல்லாத நம்பர்னு சொல்லுவாங்க. ஆனா இந்த கதையோட திருப்பமே 13-ங்கிற தேதியில நடக்கிற ஒரு மகிழ்ச்சியான, லக்கியான விஷயத்திலிருநந்து ஆரம்பிக்கிற மாதிரி இருக்கிறதால படத்திற்கு ‘13’ன்னு டைட்டில் வைத்திருக்கோம்’’ என்கிறார் இயக்குனர் சுரேஷ்!

இந்தப் படத்திற்கு ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, பவன் இசை அமைக்கிறார். எடிட்டிங்கை பகத்சிங் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் தான் ஷபானா - டிரைலர்


;