புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தரும் டி.இமான்!

Imman chance to New Singers

செய்திகள் 21-Mar-2014 11:39 AM IST VRC கருத்துக்கள்

விஜய் டி.வி.யின் ‘ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்த திவாகருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வழங்கிய டி.இமான், அதற்கடுத்து கேரளாவை சேர்ந்த கண்பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியை ஒரு படத்தில் பாட வைத்தார்! இப்படி நிறைய புதியவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்கி வரும் டி.இமான், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சரத் சந்தோஷ் என்ற இளைஞருக்கும் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இமான் இசை அமைக்கும் ’பஞ்சுமிட்டாய்’ படத்தில் வரும் டூயட் பாடல் ஒன்றில் சின்மயி கூட பாடுகிறார் சந்தோஷ்! இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாபா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;