ரிக்‌ஷா ஓட்டும் ‘கானா’ பாலா!

Gaana Bala Drivinig Rickshaw

செய்திகள் 21-Mar-2014 10:26 AM IST RM கருத்துக்கள்

நடிகர் அவதாரம் எடுத்த இசை அமைப்பளர்கள், பாடலாசிரியர்கள் வரிசையில் அடுத்து பின்னணிப் பாடகர் ஒருவரும் ஹீரோவாக களம் இறங்குகிறார்! அவர் ‘கானா’ பாலா. விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ உட்பட பல படங்களை இயக்கிய செல்வபாரதி அடுத்து இயக்கும் ‘பாரிஸ் கார்னர்’ படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ’கானா’ பாலா தான்! சென்னை நகரில் பிறந்த, ரிக்‌ஷா ஓட்டும் ஒரு தொழிலாளியின் கதையைச் சொல்லும் படமாம் இது! இப்படத்தில் ‘கானா’ பாலா ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக, கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் பாலாவுக்கான ஜோடி, மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெட்ராஸ் - 'இறந்திடவா' வீடியோ சாங்


;