சந்தானத்துடன் இணையும் ராஜகுமாரன்!

Director Rajakumaran join hands santhanam

செய்திகள் 20-Mar-2014 11:21 AM IST VRC கருத்துக்கள்

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து கலக்கியவர் சந்தானம். இவர் மீண்டும் அதே போன்ற காமெடி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் சந்தானத்துடன் கை கோர்த்து காமெடியில் கலக்கியவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்! இவர் ஏற்று நடித்தது மாதிரியான ஒரு கேரக்டர் இப்படத்திலும் உண்டு! அந்த கேரக்டரில் 100 நாட்கள் ஓ(ட்)டிய ‘திருமதி தமிழ்’ படத்தில் ஹீரோவாக நடித்த ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் நடிக்கிறார்! இந்தப் படத்தை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘ஈரம்’, ‘வேட்டைக்காரன்’ உட்பட பல படங்களில் நடித்தவரும், ‘முத்திரை’ படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்குகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சவேரி நடிக்க, சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;