‘இசை’ சம்பந்தப்பட்ட படத்தில் விஜய்சேதுபதி!

Vijay Sethupathi in Music Releated Movie

செய்திகள் 20-Mar-2014 9:45 AM IST Chandru கருத்துக்கள்

வித்தியாசமான கதை களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி, சமீபத்தில் ‘தான் கேட்டு வியந்த கதை’ என்று எல்லோரிடமும் பாராட்டும் ‘மெல்லிசை’ படத்தின் மூலம் இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து அவர் பேசும்போது,

‘‘நவீனமயமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலை சொல்லும் கதை. இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக வாழ்கிறோம். ஆனால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கிறோமா? என்பது தான் இந்த கதையின் கரு!

மெல்லிசை என்பது மேலும் மேலும் கேட்கத் தூண்டும் சுகமான இசை வடிவம். மேலும் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தபட்டவர்கள். அதுவே மெல்லிசை! இப்படத்திற்கு இசை அமைப்பவர் சாம்.சி.எஸ் எனும் அறிமுக இசை அமைப்பாளர். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். விஜய் சேதுபதி இந்த கதையை எதேச்சையாக கேட்ட மாத்திரத்தில் கால்ஷீட் தர ஒப்பு கொண்ட பின் நான் பேசியது தினேஷிடம் தான். அவர் கொடுத்த நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் காட்டிய வேகமும் பிரமாதம்.

இப்போதுதான் கதை சொன்ன மாதிரி இருக்கிறது, இதோ படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. கதாசிரியனைப் போலவே கதையைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் நாயகன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும் சிந்திக்க விடாமல் செய்து இருக்கிறார் என்பது படம் பார்க்கும்போது தெரிய வரும். ‘ரெபெல் ஸ்டுடியோஸ்’ சார்பில் தீபன் பூபதி, மற்றும் ரெதேஷ் வேலு தயாரிக்கும் ‘மெல்லிசை’ நிச்சயம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் படமாக இருக்கும்!’’ எனக் கூறினார் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;