‘கோச்சடையானு’க்கு சென்சார் சான்றிதழ்?

Kochadaiiyaan All Clean

செய்திகள் 20-Mar-2014 9:32 AM IST Chandru கருத்துக்கள்

மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அனிமேஷன் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதனையடுத்து படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிடுவதற்காக அனைத்து வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘கோச்சடையான்’ படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் குடும்பத்துடன் காணும் வகையில் இப்படம் அமைந்திருப்பதால் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி உள்ளிட்ட தமிழ்த்திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கும் இப்படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா ஆர் அஸ்வின் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;