ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்! - கமல்

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்!   -     கமல்

செய்திகள் 19-Mar-2014 4:08 PM IST VRC கருத்துக்கள்

சமூக நலனில் நடிகர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பதை நன்றாக அறிந்து, அதன்படியே செயல்பட்டும் வருபவர் கமல்ஹாசன்! வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் கமிஷன் ஒரு விழிப்புணர்வு விளக்க படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தோன்றி மக்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் கமல்ஹாசன்!
“ஒவ்வொரு குடிமகனும் தவறாமல் ஓட்டுப்போடும் கடமையை செய்யவேண்டும். ஓட்டுப் போட யார் அதிக பணம் தருகிறார்கள் என்று பார்க்காமல் உங்கள் பகுதியில் நிற்கும் வேட்பாளரின் பண்புகளையும், திறமையையும் கவனித்து, நல்லது செய்பவர் யார் என்பதை சீர்தூக்கி ஓட்டுப் போடுங்கள். தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்கி உங்கள் எதிர்காலத்தையும், சுய மரியாதையையும் விலை பேசாதீர்கள்” என அதில் கூறியுள்ளார் கமல்ஹாசன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;