மோகன்லாலுடன் டெல்லி கணேஷ்!

மோகன்லாலுடன் டெல்லி கணேஷ்!

செய்திகள் 19-Mar-2014 1:15 PM IST VRC கருத்துக்கள்

’கல்யாண சமையல் சாதம்’ படத்தை தொடர்ந்து அருண் வைத்தியநாதன் இயக்கும் படம் ’பெருச்சாழி’. மலையாளத்தில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ராகினி நந்துவானி ஜோடியாக நடிக்க, முக்கிய கேரக்டர் ஒன்றில் நம்ம ஊர் டெல்லி கணேஷும் நடிக்கிறார். ஏற்கெனவே மோகன்லாலுடன் ‘காலாபானி’ என்ற படத்தில் நடித்துள்ள டெல்லி கணேஷை, கமல்ஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’, ’மைக்கேல் மதன காமராஜன்’, ‘தெனாலி’, ‘அவ்வை சண்முகி’ போன்ற பல படங்கள் மூலம் கேரள ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்! நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி கணேஷ் நடிக்கும் மலையாள படம் ‘பெருச்சாழி’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னுள் ஆயிரம் - டிரைலர்


;