சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரஜினி முருகனா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரஜினி முருகனா?

செய்திகள் 19-Mar-2014 12:30 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் கமர்ஷியல் ஹீரோ சிவகார்த்திகேயன்! இவர் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘மான் கராத்தே’. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டாணா’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு பிறகு ஹிட் அடித்த, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேன். இந்தப் படத்திற்கு ’ரஜினி முருகன்’ என்று பெயர் வைத்திருப்பதாக சில இணையதளங்களில் செய்தி வெளியாக, அது பற்றி நாம் விசாரித்ததில்’ரஜினி முருகன்’ என்ற டைட்டில் பரிசீலனையில் இருக்கிறதே தவிர இன்னும் முடிவாகவில்லையாம். ஆனால், ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனுக்கு இந்த டைட்டில் மிகவும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;